♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
இதயமே நீ தங்கும் ஆலயம் என்
இதயமே நீ தங்கும் ஆலயம் -2
உன் ஆலயம் பரிசுத்தமானது (2)
1. என்னோடு நீ இருந்தால் நெஞ்சுக்கொரு நிம்மதிதான்
உன்னோடு நானிருந்தால் உனக்கு ஒரு சந்தோசம்தான் (2)
இருவரும் இணைந்திருந்தால் எந்நாளும் கொண்டாட்டம்தான் (2)
உன்னோடு நானும் என்னோடு நீயும்
உன் இதயத்தில் நானும் என் இதயத்தில் நீயும்
ஒன்றித்து வாழ்ந்திருப்போம் ஓருடலாய் மாறிடுவோம்
2. உனக்கொரு ஆலயம் நான் அமைத்திடவே விரும்புகிறேன்
அங்கேயே வைத்து உன்னை ஆராதிக்க எண்ணுகிறேன் (2)
நானொரு ஆலயம் என்பதையே மறந்துவிட்டேன் -2
உன்னருகில் நானும் என்னருகில் நீயும்
உன்னன்பில் நானும் என்னன்பில் நீயும்
ஒன்றித்து வாழ்ந்திருப்போம் ஓருடலாய் மாறிடுவோம்