இயேசுவே என்னிறைவா உமது

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இயேசுவே என்னிறைவா உமது பாதம் தேடினேன்

திருவடியில் தலைசாய்த்து எனது கண்கள் மூடினேன்

மௌனமாகப் பாடினேன் (2)


1. பழகிப் புரிந்த உயிர்கள் பல விலகிப் பிரிந்து போயின

நிலவு போல ஒளிர்ந்த முகங்கள் நினைவுகளாய் ஆயின (2)

நீல வானம் போல என்றும் நிலைக்கும் அன்பு உனதுதான் (2)

அன்றும் இன்றும் ஒன்றுபோல என்னை ஏற்றுக்கொள்கிறாய்

என்னை அன்பு செய்கிறாய்


2. அழுது ஓய்ந்த மனதை உந்தன்

அன்பைச் சொல்லித் தேற்றுவேன்

மெழுகு போன்ற மனதில் இன்னும்

உறுதி வேண்டிப் பாடுவேன் (2)

பொழுதுசாயும் வேளைவர உனது தீபம் ஏற்றுவேன் (2)

பழுது குறைவு எதுவுமில்லா உனது அன்பில் மகிழுவேன்

உனது நாமம் புகழுவேன்