♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
மனித நேயமே உயர்வேதம் - இதை
மன்னன் இயேசு வாழ்ந்து சொன்னாரே - 2
உன்னையே நீ அன்பு செய்தல் போலவே உன் அயலானை
நேசி என்றாரே இயேசுமகான் அனைவரையும் அன்பு செய்தாரே
1. பழிக்கஞ்சா கள்வர்களால் தாக்கப்பட்டு ஒரு
வழிப்போக்கன் சாலையிலே வீழ்ந்துகிடந்தான் (2)
வேதங்கள் கற்றறிந்த குருவும் கண்டார் - 2
அவர் வேதனையை காணாமல் தன்வழி சென்றார் 2
துன்பத்தில் வாழும் மனிதரெல்லாம் அயலாரே தம் அயலாரே
அன்புடன் அவர்க்கு உதவுதலே
புண்ணியமே வாழ்வில் புண்ணியமே
2. பரிதவித்து கிடப்பவன் கேட்பாரில்லை - கோயில்
பணியாளர் பார்த்துக்கொண்டு நேரே சென்றார் (2)
அவதியுறும் யாவருக்கும் உதவிடவேண்டும் - 2
இந்த எண்ணம் தானே மனிதனுக்கு அவசியம் வேண்டும் - 2
துன்புறக் கண்டால் துடிக்கின்ற மனம் வேண்டும் (நல்ல)
சோதரராக பிறரைக்கண்டு அணைத்திட வேண்டும் (என்றும்)