தீர்த்தம் தெளிக்கும் சடங்கை திருப்பலியில் கடைசியாக வைத்துவிட்டார்கள். திவ்ய நற்கருணை சடங்கிற்கு அப்புறம் வைத்துவிட்டார்கள்.
அப்போதானே லேட்டாக வருபவர்களுக்கும் தீர்த்தம் கிடைக்கும். இது லேட்டாக ஆலயத்திற்கு வருபவர்களை ஊக்குவிப்பது போல் இல்லையா?
தீர்த்தம் தெளிப்பதற்கு முன் ஆலயம் சென்றுவிட வேண்டும் என்று ஓடு வருபவர்களை இப்போது ஆடி அசைந்து வரவே இது வழி வகுக்கிறது.
பாரம்பரியமான அழகான பாடலை மிஸ் செய்வதோடு பாவமன்னிப்பும் ஊக்கமும் மகிழ்ச்சியும் பறிபோகிறது.
அது போல திருப்பலியில் எழுந்தேற்ற முன் திருப்பலி ஜெபம் அல்லாமல் சொல்லப்படும் மிக நீண்ட உருக்கமான ஜெபம் தேவையா? அதை நற்கருணை உட்கொண்ட பின்பு சொல்லலாமே. அதுதானே சரியாக இருக்கும். ஏனென்றால் அப்போதுதானே நம் தெய்வம் நமக்கு மிகவும் நெருக்கமாக இருப்பார்.
இந்தக் கருத்து சரியென்றால் உங்கள் பங்குத்தந்தையிடம் பேசுங்கள்!