♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
அழைக்கும் இறைவன் குரலைக் கேட்டு எழுந்து வாருங்கள்
அழைக்கும் அவரில் சங்கமமாக விரைந்து வாருங்கள்
பலி செலுத்திடவே பலன் அடைந்திடவே
படைத்த தேவன் புகழ் பரப்ப பணிந்து வாருங்கள்
1. பாதை காட்டும் ஆயனாக இறைவன் அழைக்கின்றார்
பாவம் நீக்கி பாசம் காட்ட தேவன் அழைக்கின்றார்
அன்பின் ஆட்சியே அவரின் மாட்சியே
பரமதேவன் புகழ் பரப்ப பணிந்து வாருங்கள்
2. வாழ்வு வழங்கும் வார்த்தையாக வாழ அழைக்கின்றார்
வாரி வழங்கும் வள்ளலாக பரமன் அழைக்கின்றார்
நிறைந்த வாழ்விலே நம்மை நிரப்பவே
இனிய தேவன் நம்மை அழைக்க இணைந்து வாருங்கள்