♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
கானங்கள் பாடும் காலை ஆனந்தமே என் ராகம்
அர்ப்பணித்தேன் என் ஆருயிரை
வாழ்வை உன் கரங்களில் கையளித்தேன்
1. உன்மடி அமர்ந்து உன்னையே பழித்தல் உறவென்றாகுமா
உன்மொழி கேட்டும் என்வழி வாழ்தல் உன்னிடம் சேர்க்குமா (2)
உன் பணி தொடர வருகின்றேன் உள்ளத்தைத் தருகின்றேன்
எந்தன் உள்ளத்தைத் தருகின்றேன்
2. உழைக்கும் மனிதர் உயரும் நிலையும் உலகில் மலரணும்
உழைப்பின் மாண்பை வளர்க்கும் செயல்கள்
உண்மையில் நிலைக்கணும் (2)
உரிமைகள் உணர்ந்து வருகின்றேன்
உம்மிடம் தருகின்றேன் இன்று உம்மிடம் தருகின்றேன்