எந்நாளு மேதுதிப்பாய் என்னாத்துமாவே நீ எந்நாளு மேதுதிப்பாய்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


எந்நாளு மேதுதிப்பாய் - என்னாத்துமாவே நீ

எந்நாளு மேதுதிப்பாய்

இந்நாள்வ ரையிலே உன்னத னார்செய்த

எண்ணில்லா நன்மைகள் யாவும றவாது


1. பாவங்கள் எத்தனையோ - நினை யாதி ருந்தாருன்

பாவங்கள் எத்தனையோ

பாழான நோயைஅ கற்றிக் குணமாக்கிப்

பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி


2. எத்தனையோ கிருபை - உன் னுயிர்க்குச் செய்தாரே

எத்தனையோ கிருபை

நித்தமு னைமுடி சூட்டின துமன்றி

நித்தியமான ஜீவனை மீட்டதால்


3. நன்மையா லுன்வாயை - நிறைத் தாரே பூர்த்தியாய்

நன்மையா லுன்வாயை

உன்வய துகழு கைப்போல்ப லங்கொண்டு

ஓங்கு இளமைபோ லாகவே செய்ததால்


4. பூமிக்கும் வானத்துக்கும் - உள்ள தூரம் போலவே

பூமிக்கும் வானத்துக்கும்

சாமிப யமுள்ள வர்மேல்அ வர்அருள்

சாலவும் தங்குமே சத்திய மேயிது


5. மன்னிப்பு மாட்சிமையாம் - மாதேவ னருளும்

மன்னிப்பு மாட்சிமையாம்

எண்ணுவா யோகிழக் கும்மேற்கும் தூரமே

எல்லாம் உன்பாவம்அ கன்றதத் தூரமே


6. தந்தைதன் பிள்ளைகட்கு - தயவோடி ரங்கானோ

தந்தைதன் பிள்ளைகட்கு

எந்தவே ளையும்அ வரோடு தங்கினால்

ஏற்றிப்பா ராட்டியே தூக்கிச்சு மப்பாரே