என் ஆன்ம உணவே வா என் உள்ள உயிரே வா நீயின்றிப் போனால் நான் வீழ்ந்து போவேன் நான்வாழ என்னகம் வா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


என் ஆன்ம உணவே வா என் உள்ள உயிரே வா

நீயின்றிப் போனால் நான் வீழ்ந்து போவேன்

நான்வாழ என்னகம் வா


1. முன்னோர் உண்டனர் மன்னா மடிந்து போயினர் - உன்னை

தகுதியாய் உண்டால் வாழ்வோம் சாவை வெல்லுவோம் (2)

ஆவலாய் அழைத்தேன் வா இறைவா - இந்த

ஏழைக்கு உன்னருள் தா இறைவா (2)

உன்னில் நான் என்னில் நீ வாழ்ந்திட வரம் தா


2. இனி நான் மெல்ல தேய்வேன் மறைந்து போவேன்

இனி நீரே என்னில் வாழ்வீர் வாழச் செய்குவீர் (2)

எனவே அழைத்தேன் வா இறைவா - என்றும்

என்னகம் குளிர வா இறைவா

உன்னில் நான் என்னில் நீ வாழ்ந்திட வரம் தா