எல்லாம் தருகின்றேன் தந்தாய் என்னையும் தருகின்றேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


எல்லாம் தருகின்றேன் தந்தாய்

என்னையும் தருகின்றேன் (2)


1. இயற்கை ஈந்த மலர்கள் பறித்தே

தருவேன் உமக்குக் காணிக்கை (2)

உழைப்பின் பயனாய் கிடைத்த பொருளை

என்னோடு இணைத்தே தருகின்றேன் - 2


2. பிறருக்காக வாழ்வதில் நானும்

என்னையே உம்மிடம் தருகின்றேன் (2)

பிறரின் சுமையை விரும்பிச் சுமக்க

என்னையும் தகுதியாக்குவாய் - 2