வண்ணத்தமிழ் பாட்டுப்பாடி அழகு மலர் தூவித் தூவி இறைவன் பாதம் பணிந்து வணங்கி புகழ்ந்தேத்துவோம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


வண்ணத்தமிழ் பாட்டுப்பாடி அழகு மலர் தூவித் தூவி

இறைவன் பாதம் பணிந்து வணங்கி புகழ்ந்தேத்துவோம் (2)

இறையருளில் வாழ்ந்து மனித மாண்பில் உயர்ந்து - 2

இறையரசை உலகில் பரப்பக் கூடிடுவோம் மகிழ்ந்திடுவோம்


1. அன்பின் உருவமே அருளாகும் செல்வமே

அழகின் தென்றலே சங்கீதமே (2)

மரியின் இயேசுவே என் வாழ்வின் ஜீவனே -2

நீதி தேவனே உண்மை வாழ்வின் சிகரமே

உம்மைப்போல எங்கள் வாழ்வை உயர்த்திடுவாயே -2

பலியாகிப் பணியாகி உம்மில் வாழ்ந்திடுவோம் -2

உறவாகி ஒளியாகி வாழ்வைக் காட்டிடுவோம் -2

நிறைவாகி நினதாகி உம்மில் சரணடைவோம் -2

ஒன்றாய்க் கலந்திடுவோம் உம்மில் கரைந்திடுவோம்


2. கருணைக் கடவுளே இரக்கத்தின் அமுதமே

இனிய நாதனே உயிர் நாதமே (2)

அம்மையே அப்பனே ஒப்பில்லா மகுடமே -2

முதலும் முடிவுமே எம்மை இயக்கும் தெய்வமே

கரங்கள் நீட்டி அரவணைத்துக் காத்தருள்வாயே -2 பலியாகி...