என்னிறை தேவன் ஏற்றிய தீபமே பாமரன் பாடல் தன்னிறை அன்பால் தான் கண்ட ஜீவனாம் பரமனின் பாதம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


என்னிறை தேவன் ஏற்றிய தீபமே பாமரன் பாடல்

தன்னிறை அன்பால் தான் கண்ட ஜீவனாம் பரமனின் பாதம் (2)

எந்நாதமே என்னிதயம் பண்ணாகுமே

எந்நாளுமே அவரன்பு என் மீதிலே


1. என் ஆயன் நீ உன் பாதையில்

எந்நாளும் நான் பாடும் சங்கீதமே

உன்னோடுதான் ஒன்றாகிட

உயிரோடு உயிர் சேர்ந்து உறவாகிட

நெஞ்சமும் பாடுது கண்களும் தேடுது

தஞ்சமென்றவரையே என்னுள்ளம் நாடுது (2)


2. உறவானவா என் உயிரானவா

உலகெங்கும் அரசாளும் என் மன்னவா

நிலையானவா என் சுவையானவா

அலைபாடும் கடலாக எனைக்காக்க வா

என்னன்பு தேவனே என்னகம் வாருமே

என்னிலே எழுந்து நீர் என்னிலை மாற்றுமே (2)