♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
இயேசு நம்மோடு இருக்கின்றார்
எப்போதும் அதிசயம் செய்திடுவார்
அன்போடும் பண்போடும் நாம் வாழ்ந்திட
ஆவியின் வரங்கள் பொழிந்திடுவார்
1. மரியாவின் வேண்டுதலால் இலாசரை உயிர்ப்பித்தாரே - 2
நமது ஏக்கங்களை இப்போதும் எப்போதும் நிறைவு செய்வார்
வாழ்க இயேசுவின் நாமம் வாழ்க
தேனினும் இனிய நாமம் வாழ்க
2. பெத்சாய்தா குருடனைப் போல் இயேசுவை அழைத்திடுவோம் - 2
நம்பிக்கை நாயகனாய் நம் நோய்கள் யாவையும் போக்கிடுவார்
வாழ்க இயேசுவின் நாமம்...
3. எல்லாமே இழந்தாலும் குறை ஒன்றுமில்லையே - 2
வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் நமக்கு எல்லாமே நம் இயேசுதான்
வாழ்க இயேசுவின் நாமம்...