ஆரோக்கிய மாதாவே உமது புகழ் பாடித் துதித்திடுவோம்

1. ♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 

2. ♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஆரோக்கிய மாதாவே உமது புகழ்

பாடித் துதித்திடுவோம் - எந்நாளும் பாடித் துதித்திடுவோம் (2)


1. அலைகள் மோதிடும் கடற்கரை தன்னில்

வசித்திட ஆசை வைத்தாயே (2)

பலவகைக் கலைகளும் பாரினில் துலங்கிட

அனைவருக்கும் துணை புரிந்தாயே - 2


2. தேன்கமழும் சோலை சூழ்ந்து விளங்கும்

வேளாங்கண்ணியில் அமர்ந்தாயே (2)

வானகமும் இந்த வையகமும்

அருள் ஓங்கிட எங்கும் நிறைந்தாயே -2