♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
நல்ல காலம் பொறந்திருச்சு நாடும் வீடும் செழிச்சிருச்சு
புனிதர் கோவில் தொறந்திருச்சு நமக்குப் புதுவாழ்வு மலர்ந்திருச்சு
பாமால பாடிடுவோம் சவேரியாரே - ஒங்க
பாதம் தொட்டு வணங்கிடுவோம் சவேரியாரே
கொண்டாடி மகிழ்ந்திடுவோம் சவேரியாரே - ஒமக்கு
கோவில் கட்டி கும்பிடுவோம் சவேரியாரே
1. இயேசுசாமி வார்த்தைகளப் பேசி வந்த போதகரே
இறையரசின் தூதுவரே சவேரியாரே
இஞ்ஞாசியார் கண்டெடுத்த இயேசு சபை மாமுனியே
இறைவன் தந்த அருட்கொடையே சவேரியாரே
வாழியவே வாழியவே சவேரியாரே - எங்க
விசுவாச நாயகனே சவேரியாரே
2. தென்னாட்டுப் பகுதியிலே கடலோர ஊர்களிலே
நற்செய்தி போதித்த சவேரியாரே
நம்பி வந்த எங்களது முன்னோர்கள் யாவருக்கும்
ஞானஸ்நானம் வழங்கிய சவேரியாரே
கட்டுமர ஓடத்திலே கடல் மீது போகையிலே
கிட்டிருந்து காத்திடுமே சவேரியாரே
அலையோடு போராடி வலைவீசும் வேளையிலே
நல்லாசி தந்திடுமே சவேரியாரே