வாருங்கள் மானிடரே பாருலகம் உள்ளவரை


வாருங்கள் மானிடரே பாருலகம் உள்ளவரை

பாமாலைப் பாடி பரமனை நாம் போற்றிடுவோம் -3

ஆதியுமாய் அந்தமுமாய் ஜோதியுமாய் சொந்தமுமாய் -2

நீதியுமாய் நேர்மையுமாய் - 2 நீர் உலகில் வாழ்வதனால்


1. அன்னையுமாய் தந்தையுமாய் ஆளும் நல்ல ஆயனுமாய் -2

இன்னலிலே இன்பமுமாய் (2)

இறைவன் என்னில் இருப்பதனால்


2. இனிமை இரக்கம் நிறைந்தவராய்

அன்பு அமைதி பொழிபவராய் (2)

ஆண்டவரே நம் கடவுள் - 2 என்று புகழ் பாடிடவே