♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
ஆண்டவரே என் தேவனே கண்டுகொண்டேன் உம்மையே
ஆண்டவரே என் தேவனே விசுவசித்தேன் உம்மையே
ஆண்டவரே என் தேவனே தியானிக்கிறேன் உம்மையே
உந்தன் அருட்கொடைகள் எண்ணியே
இன்று அர்ப்பணித்தேன் என்னையே
1. நேற்றும் இன்றும் மாறாத இறைவா உம்மையே நம்பிடுவேன்
காற்றும் கடலும் பணிகின்ற முதல்வா ஆற்றலைப் போற்றிடுவேன்
ஒரு சொல் கூறும் எல்லாம் கூடும் - 2
உன்னருள் போதுமையா எனக்கு வேறென்ன வேண்டும் ஐயா
2. பால் நினைந்தூட்டும் தாய் மறந்தாலும் நீ என்னை மறப்பதில்லை
பாவத்தின் பிடியில் நான் கிடந்தாலும் நீ என்னை வெறுப்பதில்லை
கருவினில் தெரிந்து கரந்தனில் பொதிந்து -2
காத்திடும் தெய்வமையா உமது திருவடி சரணமையா