♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
இறையாட்சி மலர்ந்திட நம்மில் புதுயுகம் பிறந்தது
நிறைவாழ்வு தொடர்ந்திட இன்று நம்மையே அழைக்குது
நாம் இணைந்தே சென்றிடுவோம்
புதிய காவியம் படைத்திடுவோம் (2)
1. நொறுங்கிய மனிதம் உயிர்பெற அழிந்த வாழ்வு வளம்பெற -2
தொலைந்த முகங்கள் உருப்பெற
இறைவன் நம்மில் எழுகின்றார் (2)
கரங்கள் நீட்டி அழைக்கின்றார் புதிய உலகம் படைக்கின்றார்
2. பகைமை எங்கும் நீங்கிட அன்பில் நாளும் உறைந்திட -2
நிறைவை எங்கும் கண்டிட இறைவன் நம்மில் எழுகின்றார் -2
இணைந்து வாழ பணிக்கின்றார் பிறரில் மகிழ அழைக்கின்றார்