இயேசு நாதர் கூறுகிறார்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இயேசு நாதர் கூறுகிறார் இதைக் கொஞ்சம் கேளுங்கள்

அவர் இதயத்தை திறந்து சொல்வதைக் கேட்டு

மனிதராய் வாழுங்கள் - 2


1. மாசறு பொன் மனம் படைத்தவன் தானே

உலகில் முழுமனிதன் (2) புவி

மாந்தருக்காக தியாகங்கள் செய்பவன்

மனிதருள் அவன் புனிதன் - 2


2. ஆசையை வென்றவன் அகிலத்தை வென்றவன்

ஆவான் இது உண்மை (2) நல்

அமைதியைக் கெடுக்கும் மனச் சுமைக் குறைந்தால்

ஆயிரம் வரும் நன்மை - 2