நீங்கள் என் சாட்சிகள் வாழ்வினில் காட்டுங்கள் நீங்கள் என் சாட்சிகள் உலகினை வெல்லுங்கள்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


நீங்கள் என் சாட்சிகள் வாழ்வினில் காட்டுங்கள் -2

நீங்கள் என் சாட்சிகள் உலகினை வெல்லுங்கள் (2)

(அல்லேலூயா அல்லேலூயா - 4)


1. அன்பின் சாட்சியாய் விளங்கிடுவீர்

அருட்திரு ஆவியைப் பெற்றிடுவீர் (2)

நானிலம் சென்று பலன் தருவீர் - 2

நன்மைகள் உண்டாகும் நல்வாழ்வு கொடுத்திட


2. தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும் (2)

தேடுங்கள் கிடைக்குமென்று - 2

நம்பிக்கை உண்டாகும் நல்வாழ்வு கொடுத்திட