ஓயாத கருணையின் இறைவனே உளமார்ந்த நன்றி நன்றி

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஓயாத கருணையின் இறைவனே

உளமார்ந்த நன்றி நன்றி (2)

பாயாத இடமெல்லாம் பாய்ந்து ஓடிடும் -2

காயாமல் அவை என்றும் பயன்கள் நல்கிடும்


1. காலங்கள் மாறலாம் கடல் வற்றிப் போகலாம்

ஆனால் உன் கருணையோ மாறாதது

மலை சாய்ந்து போகலாம் மனம் கல்லாய்ப் போகலாம்

ஆனால் உன் கருணையோ தீராதது

மாறாத இறைவா தீரா உன் கருணையை

இறவாத வரையில் மறவாது புகழ்வேன் (2)


2. சொந்தங்கள் மாறலாம் சுவையற்றுப் போகலாம்

ஆனால் உன் கருணையோ மாறாதது

எல்லாமும் மாறலாம் இல்லாமல் போகலாம்

ஆனால் உன் கருணையோ மாறாதது - மாறாத இறைவா ... ...