♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
காணிக்கை கரம் ஏந்தி நான் வரும் நேரம்
காலத்தின் தலைவா நீர் கரம் நீட்ட வேண்டும்
காரணத்தோடு எனைப் படைத்தவரே
காணிக்கையாய் எனை ஏற்றுக்கொள்வீரே
1. உள்ளத்தை உமக்கே தரவந்தேன்
உகந்தது அதுவே என நினைத்தேன் (2)
உலகத்தை அன்பால் ஈர்த்தவரே -2
உமக்கென எனை நான் தருகின்றேன்
2. என்னகம் படைத்து எனைக் காத்தீர்
என்ன நான் தருவேன் உமக்கெனவே (2)
எனக்கென்று ஒன்றில்லை இவ்வுலகில் -2
என்னையே அளிக்கின்றேன் உமக்குடனே