ஆன்மாவின் இராகத்தைக் கேட்கின்ற தேவா
எம் மன்றாட்டைக் கேட்டருளும்
1. இயேசுவின் உடலாம் திருச்சபையை
வழிநடத்தும் எம் திருத்தந்தை
ஆயர்கள் குருக்கள் துறவறத்தார்
இயேசுவின் பாதையில் நடந்திட
வல்லமை தந்திட வேண்டுகிறோம்
2. தேசம் அமைதி அடைந்திட
துன்புறும் மானிடர் மகிழ்ந்திட
மன்னவா உமது அரசுக்காக
உழைக்கும் உள்ளங்கள் முன்வர
இறைவா உம்மை வேண்டுகிறோம்
3. திருப்பலி நிறைவேற்றும் தந்தையரை
ஆசீர்வதித்து இறையன்பில்
நிலைத்து நாளும் வாழ்ந்திட
வரங்கள் நிறைவாய் பொழிந்திட
வல்லவரே உம்மை வேண்டுகிறோம்
4. பல்தொழில் செய்யும் மாந்தருக்கு
திடம் சுகம் தந்து அருள் பொழிந்து
நோய்நொடி நீக்கி அருள் தந்திட
அருள் பொருள் வளத்தில் உயர்ந்திட
ஆண்டவா உம்மை மன்றாடுகிறோம்
5. வானகம் பொழிந்து பயிர் செழித்து
வையகம் குளிர்ந்து பசுமையும்
மச்சங்கள் நிறைந்து சமுத்திரமும்
அச்சங்கள் களைந்து மானிடரும்
என்றுமே வாழ்ந்திடக் கோருகிறோம்