இயேசுவே என் இறைவனே இணையில்லாதத் தலைவனே உயிராய் என்னில் எழுந்துவா உறவாய் என்னில் கலந்து மகிழ வா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இயேசுவே என் இறைவனே இணையில்லாதத் தலைவனே

உயிராய் என்னில் எழுந்துவா உறவாய் என்னில்

கலந்து மகிழ வா - நீயாக நான் மாறவா (2)


1. உனது உடலை உண்ணும் நானும்

வளம் பெறுவேன் வாழ்வடைவேன் ஆ (2)

உன்னில் இணைந்து நான் மகிழுவேன்

உடைந்திடும் என் வாழ்வில் உயிரூட்டும் உணவே வா -2

உறவின் பாலம் நானமைக்க வா - இயேசுவே -2


2. உமது உதிரம் பருகும் நானும்

பலம்பெறுவேன் பலன் அடைவேன் ஆ (2)

என்னை இழந்து நான் மகிழுவேன்

உனக்காக நான் வாழ்ந்து உன்னோடு நான் சேரும் -2

புனித நாளை நான் காணுவேன் - இயேசுவே -2