♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
கண்ணுக்குள் கருவிழியாய் நெஞ்சுக்குள் எனைத்தாங்கி
கரங்களில் என் பெயர் பொறித்த இறைவா (2) - உனை
உயிரோடு இணைத்து உறவாகக் கொண்டு
உளமாரச் சொல்வேன் வாழ்வாலே நன்றி
1. மண்ணுக்குள் நீ தந்த கொடையென்னும் வாழ்வில்
எண்ணற்ற நன்மைகள் நிதம் பொழிகின்றாய்
விண்ணுக்குள் நான் வந்து உனைக்காண நினைத்தால்
மண்மீது மனிதத்தின் மாண்பாய் உள்ளாய்
உன்னோடு நான் வாழும் உயிருள்ள நாள் வரையில்
உன்பாசப் பணியாகி உயர்நன்றி நானாக (2)
இறைவா நன்றி இனிதாய் நன்றி
நிறைவாய் நன்றி நானே நன்றி (2)
2. அன்புக்குள் புவி வாழும் உன் ஏக்கப் பணியாற்ற
ஆக்கத்தின் அருள் அனலாய் உனைத் தருகிறாய்
இறக்கின்ற நீதிக்கு உயிர் மூச்சு நானாக
இதயத்தை நீ இயக்கி எனில் வாழ்கிறாய்
உனைப்போல நான்தேடும் உயர்வான நோக்கங்கள்
உலகெங்கும் செயலாக்கி உயிர்நன்றி உயிராலே (2)
இறைவா நன்றி இதயா நன்றி
உறவாய் நன்றி உயிராய் நன்றி (2)