இறை இயேசு அழைப்பேற்று அவர் அன்பு வழிசென்று

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இறை இயேசு அழைப்பேற்று அவர் அன்பு வழிசென்று

புதுவாழ்வு நாம் காணுவோம் (2)

அதை நிறைவாக நாம் வாழுவோம்

நிறைவாழ்விது புதுவாழ்விது - 2

நற்செய்தி ஒளியாக சமநீதி நெறியாக -2

இறைத் தந்தையில் அகமகிழ்ந்திட

இறையரசினில் இகம் மலர்ந்திட


1. பரலோகத் தந்தாய் உம் புகழ் பாடுவோம் - புதுப்

படைப்பாக எமை மாற்ற அருள் வேண்டுவோம் (2)

வரலாறு புதிதாக உருவாக்குவோம் - அதில்

வறியோரின் வருங்காலம் வளமாக்குவோம் (2)

விடுதலையின் தீபங்களாய் விளிம்புகளே மையங்களாய் -2

இனி விளங்கிட என்றும் சிறந்திட புது விடியலும் இன்று புலர்ந்திட


2. உயர்வென்றும் தாழ்வென்றும் நிலைமாறுமே - இனி

உலகெங்கும் உள்ளங்கள் உறவாகுமே (2)

விடிவெள்ளி என இயேசு எழும் போதிலே

விடுதலையின் நற்செய்தி பூபாளமே (2)

இறைமகனின் தலைமையினில் எளியவரின் தோழமையில் -2

புது உலகமும் நாம் படைத்திட புது சமூகமும் அதில் அமைத்திட