தேற்றிடும் தூய ஆவியே ஆற்றலும் ஆக்கமும் உடையவரே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


தேற்றிடும் தூய ஆவியே ஆற்றலும் ஆக்கமும் உடையவரே

இறைவனின் சாட்சியாய் விளங்கிடவே

உன்னருள் கொடைகளை வழங்கிடுவீர்

வருக வருக தேற்றிடும் தூய ஆவியே


1. மனத்தின் தீமைகளை மன்னிக்க எழுந்தருள்வீர்

மனத்தின் கீறல்களை மாற்றிட எழுந்தருள்வீர்


2. கல்மன இதயத்தைக் கரைத்திட எழுந்தருள்வீர்

உண்மையின் வழிநடக்க கொடைகளைப் பொழிந்திடுவீர்