♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
அழகினில் மலர்ந்திடும் சகாயமே
அன்பினில் ஒளிர்ந்திடும் தாரகையே
அலையென வருவோர்க்கு அடைக்கலம் நீயே
அகிலத்தைக் காத்திடும் நாயகியே (2)
அழகினில் மலர்ந்திடும் சகாயமே
1. உந்தன் அழகு தவழும் முகமே
இந்தப் புவியினில் மேலானது
உந்தன் இரக்கம் மிகுந்த பார்வை
எந்தன் துன்பத்தைத் துடைக்கின்றது (2)
உம் தரிசனம் காண அனைவரும் விரைந்து
உம்மைப் போற்றிப் புகழ்வோம்
உம்மை வாழ்த்திப் பாடி மகிழ்வோம்
2. உந்தன் சக்தி வாய்ந்த செபமே
எந்தன் வாழ்வில் என்றும் ஜெயமே
உந்தன் அன்பு பொழியும் கரமே
எனை வாழவைக்கும் வரமே - உம் தரிசனம் ... ...