♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
இதயத் துடிப்பில் உணர்வேன்
நீரே வாழ்வின் மையம் என்று
சுவாசம்தோறும் உணர்வேன் வாழ்வு என்பது நீரென்று
1. கண்ணின் மணிபோல் காக்கும் தெய்வம்
உன்னையன்றி வேறில்லை
ஆயன் போல வழியைக் காட்ட உன்னையன்றி வேறில்லை
உனையே அழைத்து ஓடிவந்தேன் சிறகைவிரித்து அணைப்பாயே
உமது கரத்தை இறுகப் பிடித்தே இடறல் தவிர்த்து காப்பாயே
2. அன்பு என்னும் அமுதம் ஊட்ட உன்னையன்றி வேறில்லை
தனிமைத் துயரில் நண்பர் உறவால் உன்னையன்றி வேறில்லை
உனது கருணைப் பார்வை போதும் வாழ்வில் எல்லாம் கைகூடும்
உனது சிறிய வார்த்தை போதும்
ஏங்கும் உள்ளம் நலம்பெறும்