மாறாக, நம் பாவங்களை ஏற்றுக்கொள்வோமானால், அவர் நம்பிக்கைக்குரியவர், நீதியுள்ளவர் என விளங்குவார். நம் பாவங்களை மன்னிப்பார்; எல்லா அநீதியினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்துவார்.
நாம் பாவம் செய்யவில்லை என்போமானால், அவரைப் பொய்யராக்குகிறோம். அவரது வார்த்தை நம்முள் இல்லை.
1 அருளப்பர் 1 : 8-10 ( 1 யோவான் 1 : 8-10)
அன்பான மக்களே ! இப்போது நம்மிடயே பலர் “ நான் பாவி இல்லை. நான் இரட்சிக்கப்பட்டு விட்டேன் “ என்று சொன்னால் அவர் யார் என்றும், அவர் யாரை ஏமாற்றுகிறார் என்றும் பாருங்கள். அப்படி சொல்வோரைப்பற்றிய கவலை வேண்டாம்.
மாறாக நாம் பாவி என்றும் நம் பாவங்களை ஏற்றுக்கொண்டு அதற்காக மனம் வருந்தி பாவத்தைவிட்டு விலகி தூயவர்களாக மாற முயற்சி செய்துகொண்டே இருக்க வேண்டும். அதற்காக நாம் பாவத்திலே வாழ்வேன் என்று சொன்னால் அவன் இயேசுவிடம் இல்லை, சாத்தானோடு உறவாடுகிறான் மனம் திருந்தாதவன் முடிவில்லாத நரகத்திற்கு முன் குறிக்கப்பட்டவன்.
ஆகவே ஒவ்வொரு நொடியும் நான் பாவி என்று ஏற்றுக்கொண்டு இயேசுவின் வழியாக மீட்படைய முயற்சிகள் செய்துகொண்டும். அதற்காக ஜெபம் தவம் பரித்தியாகம் செய்துகொண்டும் சாகும்வரை வாழ வேண்டும். நமக்கு மோட்சம் கிடைக்குமா? நாம் உண்மையிலேயே இரட்சிக்கப்பட்டுவிட்டோமா என்பது ஆண்டவராகிய இயேசுவிற்கே தெறியும்...
ஆக இரட்சிப்பை பற்றி குழப்பிக்கொள்ளாமல் அதற்காக கடைசி வரை முயற்சிப்பே நம்மை இயேசுவிடம் கொண்டு போய்சேர்க்கும் என்பதை மறவாதீர்கள்.
இயேசுவுக்கே புகழ் !