♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
ஒரு கோடிப்பாடல்கள் நான் பாடுவேன் - அதைப்
பாமாலையாக நான் சூடுவேன்
உலகெல்லாம் நற்செய்தி நானாகுவேன் - உந்தன்
புகழ்ப்பாடி புகழ்ப்பாடி நான் வாழுவேன்
1. இளங்காலைப் பொழுதுந்தன் துதிபாடுதே - அங்கு
விரிகின்ற மலர் உந்தன் புகழ்பாடுதே (2)
அலை ஓயாக் கடல் உந்தன் கருணை மனம் - வந்து
கரை சேரும் நுரை யாவும் கவிதைச் சரம் (2) - ஆதியும்...
ஆதியும் நீயே அந்தமும் நீயே
பாடுகிறேன் உனை இயேசுவே
அன்னையும் நீயே தந்தையும் நீயே
போற்றுகிறேன் உனை இயேசுவே
2. மனவீணை தனை இன்று நீ மீட்டினாய் - அதில்
மலர்பாக்கள் பலகோடி உருவாக்கினாய் (2)
என் வாழ்வும் ஒரு பாடல் இசை வேந்தனே - அதில்
எழும் ராகம் எல்லாம் உன் புகழ் பாடுதே (2)