♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
அன்பும் அமைதியும் நீரே
இன்ப நற்கருணை நாதா
நன்றியும் துதியும் புகழும் (2)
நாளுமே உமக்கே இறைவா - 2
இயேசுவே இறைவா போற்றி உந்தன்
நேச நற்கருணை போற்றி
1. எந்நிதி இருந்தும் யாரிருந்தும் உன்
சன்னிதி போலெது பூமியிலே (2)
கண்ணெதிரே நின்று கரம் நீட்டும் - 2
கருணையே உம்மில் சரணடைந்தோம்
இயேசுவே இறைவா . . .
2. ஆசையில் உழன்றோம் சுகம் இழந்தோம்
எம் அறிவியல் உலகில் நெறி இழந்தோம் (2)
பாசமுடன் நீர் பரிமாறும் - 2
கருணையின் நலம் நாம் கண்டோம்