♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
அன்னையே உனை எண்ணும்போதே
என்னையே நான் மறக்கின்றேனே (2)
உந்தன் அன்பைப் உலகம் அறியும்
எந்தன் மனமே சான்றுகூறும் - அன்பு அன்னையே - 2
1. வாழ்விழந்த பிள்ளையாவும் உந்தன் பிள்ளைகளே
உந்தன் அன்பைப் பாடும்போது இல்லை எல்லைகளே
இறைவனே உன் சேவை கண்டு இறையரசி என்று சூட்டி
எம்மைக் காக்க வைத்தார் கருணை பொழிய வைத்தார்
2. வழியிழந்து வருந்துவோரைத் தேற்றும் அன்னையே
வாழ்க்கைப் பயணம் போகும்போது துணையாய் நின்றவளே
அன்னையே உன் அன்பைக் கண்டு
அவனியெங்கும் பெருமை சொல்வேன்
எம்மை வாழ வைத்தாய் வளமை பொங்க வைத்தாய்