என்னைச் சுமப்பதனால் இறைவா உந்தன் சிறகுகள் உடைவதில்லை என்னை நேசிப்பதால் இறைவா உந்தன் அன்பு குறைவதில்லை

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


என்னைச் சுமப்பதனால் இறைவா

உந்தன் சிறகுகள் உடைவதில்லை

என்னை நேசிப்பதால் இறைவா உந்தன் அன்பு குறைவதில்லை

இயேசுவே என் சொந்தமே இயேசுவே என் பந்தமே

எந்நாளும் எனைக் காக்கும் என் தெய்வமே


1. அன்பு ஒன்றால் உலகை ஆள உண்மை வழியைக் காட்டினாய்

பகைமை நீக்கி பாசம் ஓங்க நேச தீபம் ஏற்றினாய்

உன் சிறகின் நிழலில் பயணம் தொடர்வேன்

பாதுகாப்பாய் இறைவா என்னைப் பாதுகாப்பாய் இறைவா


2. நீதிவழியில் நிறைவினைக் காண நீயும் உலகில் தோன்றினாய்

சேயை நேசிக்கும் தாயைப்போல

தயவாய் என்னைக் காக்கின்றாய்

உம் அமைதியின் வழியில் அனைத்துமாய் ஆனேன்

ஆண்டு நடத்தும் இறைவா என்னை ஆண்டு நடத்தும் இறைவா