தந்தையின் வீட்டிற்கு திரும்பிடுவேன் நான் எந்தையின் பாதம் பணிந்திடுவேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


தந்தையின் வீட்டிற்கு திரும்பிடுவேன் நான்

எந்தையின் பாதம் பணிந்திடுவேன் (2)

மகனாக அல்ல பணியாளன் எனவே - 2

மன்னித்து ஏற்றிட மன்றாடுவேன்


1. ஊழியர் பலரும் தந்தையின் வீட்டில்

உண்டு மகிழ்ந்து உறவாடும் போது (2)

பசியின் பிடியில் பன்றிகள் நடுவில் - 2

ஊதாரி மைந்தன் உழல்வதும் ஏனோ? - 2


2. வாடி வரும் எனை தந்தையும் காண்பார்

ஓடி வந்து தான் அணைத்துக் கொள்வார் (2)

மாண்டேன் நான் என்று எண்ணிய தந்தை - 2

மீண்டேனென்றேதான் கொண்டாடி மகிழ்வார் - 2