♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
நான் உன்னைவிட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை (2)
1. தாயுன்னை மறந்தாலும் ஊருன்னை வெறுத்தாலும் - 2
உன்னோடு உனக்காக நானிருக்கிறேன் - 2
விலகுவதில்லை நான் விலகுவதில்லை
உன்னை விட்டு எப்போதும் விலகுவதில்லை (2)
நான் உன்னைவிட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை
நீர் என்னைவிட்டு விலகுவதில்லை
நீர் என்னை என்றும் கைவிடுவதில்லை (2)
2. சொந்தங்கள் பிரிந்தாலும் சோகங்கள் தொடர்ந்தாலும் - 2
என்னோடு எனக்காக நீரிருக்கின்றீர் 2
கைவிடுவதில்லை நீர் கைவிடுவதில்லை
என்னை மட்டும் எப்போதும் கைவிடுவதில்லை (2)
நீர் என்னைவிட்டு விலகுவதில்லை
நீர் என்னை என்றும் கைவிடுவதில்லை