புதுயுக நாயகன் அழைக்கின்றார்


புதுயுக நாயகன் அழைக்கின்றார்

வாருங்கள் மானிடரே (நம்மை) (2)

நம் இன்னல்கள் நீக்கி மகிழ்வினைத் தருவார்

வாழுங்கள் மானிடரே (2)


1. வாழும் வழியைக் காட்டிடுவார் வசந்தம் வீசிட வழி சொல்வார்

நீதிப் பாதையில் நடந்திடவே நித்தம் காத்திடுவார் (2)

அவர் பலியில் இணைந்திட செல்வோம்

அவர் அன்பைப் பகிர்ந்திடக் கேட்போம் (2)


2. உலகின் ஒளியாம் நம் தேவன் ஜீவனுள்ள வார்த்தைகளால்

நம்மைத் தேற்றிட அழைக்கின்றார் விரைந்து சென்றிடுவோம் (2)

அவர் பலியில் இணைந்திட ... ...


3. நீதி அன்பும் ஓங்கிடவே உலகில் அமைதி நிலைத்திடவே

ஏற்றத் தாழ்வுகள் மறைந்திடவே அழைக்கின்றார் செல்வோம் (2)

அவர் பலியில் இணைந்திட ... ...