தரணியர் வாழ்த்தும் தாய்மரியே
வரம் விழைந்தோம் யாம் வாழ்வளிப்பாயே (2)
1. குவலயம் போற்றிடும் கோமகனை
குறையினைப் போக்கிட கொடுத்தவளே (2)
குறையற்ற மனுக்குலம் மிளிர்ந்திடவே
கருணையின் முகில்தனைப் பரப்பிடுவாய்
2. சிலுவையின் அடியிலே தாயானாய்
சிறுமையில் மனிதன் துணையானாய் (2)
சிலுவையைச் சுமந்திட துணை புரிவாய்
சிதறிய மனிதரைச் சேர்த்திடுவாய்