♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
வாருங்கள் இறைமக்களே
இறைமகன் காட்டிய முறைதனில் பலியிட
வாருங்கள் இறைமக்களே
1. குருவுடன் கூடி குடும்பமாய் மாறி
இறைவனை உண்டு புனிதராய் மாறிட
2. இறைவனின் வார்த்தையை இதயத்தில் ஏற்று
இனிவரும் வாழ்வில் புது ஒளி பெறவே
3. பகைமையை ஒழித்து புலன்களை அறுத்து
நலன்களை நாடியே நன்மைகள் அடைந்திட