♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
இறைவனின் பலியில் இணைந்திட வருவோம்
இறைவன் அழைக்கின்றார் இனிதே அழைக்கின்றார் (2)
துன்பம் இல்லை துயரம் இல்லை இறைவனின் உறவினிலே
வாழ்வுண்டு வழியுண்டு இறைவனின் துணையினிலே
1. அடிமைத் தளையிலிருந்து அன்று முன்னோரை மீட்ட தேவன் -2
பாவத் தளையிலிருந்து நம்மை மீட்கவே அழைக்கின்றார்
துன்பம் இல்லை.....
2. அடிமை என்றழைக்கவில்லை நம்மை நண்பர்கள் என்றாரே - 2
உரிமை வாழ்வு வழங்க நம்மை பெயர் சொல்லி அழைக்கின்றார்
துன்பம் இல்லை....