பெத்தலையிலே சின்னப் பாலன் பிறந்தார் இறைவன் நம்மோடு கொண்டாடுவோம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


பெத்தலையிலே சின்னப் பாலன் பிறந்தார்

இறைவன் நம்மோடு கொண்டாடுவோம் (2)

தனை வழங்கும் தலைவன் இவரே - 2

உள்ளக்குடிலில் பிறந்து வந்த ஒளியே

பெத்தலையிலே சின்னப் பாலன் பிறந்தார்

இறைவன் நம்மோடு கொண்டாடுவோம்


1. ஏழைகள் வாழ்வினிலே - புது நற்செய்தி ஒளியாகினாய்

சிறை உழன்றோரெல்லாம் விடுதலை - என்றும்

அடைந்திட உழைக்க வந்தாய் (2)

ஆண்டவர் அருள்தரும் ஆண்டினைக் கொணர்ந்தாய்-2

உலக இருளகற்றும் ஒளி விளக்கே


2. விழிகளை இழந்தவரின் புதுப்பார்வைகள் நீயாகினாய்

ஒடுக்கப்பட்டோரெல்லாம் உரிமைகள் - பெற்று

மகிழ்ந்திட மலர்ந்து வந்தாய் (2)

ஆண்டவர் அருள்தரும் ஆவியைப் பொழிந்தாய் -2

அன்பின் வழி நடக்க எமைப் பணித்தாய்