அன்புக்குப் பாடல் பாடுவேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


அன்புக்குப் பாடல் பாடுவேன்

நெஞ்சத்தில் மன்னனை நாடுவேன்

இன்பத்தின் ஊற்றே இயேசுவே - உன்

இன்புகழ் பாடி மகிழ்ந்திடுவேன்


1. வேதனை ஆயிரம் நான் அடைந்தேன் அந்த

வேளையில் ஊன்றுகோல் நீ தெரிந்தேன் (2)

உயிரின் வார்த்தையே எந்தன் உள்ளத்தில் வாழுமே - 2

உன் நாமம் பாடுகையில் என் நாவும் ஒலித்திடுமே


2. கல்வாரி மலையில் உன்னுயிர் தந்ததும்

எல்லோர்க்கும் வாழ்வாய் எழுந்ததுவும் (2)

அன்பின் ஆட்சியாய் என்றும் இன்பத் தாழ்ச்சியாய் -2

சொல்லில்லை கூறிடவே இசையில்லை பாடிடவே