♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
என்னைச் சுமப்பதனால் இறைவா
உன் சிறகுகள் முறிவதில்லை
அள்ளி அணைப்பதனால் இறைவா உன் அன்பு குறைவதில்லை
ஆயிரம் மின்னல் இடித்திட்ட போதும் வானம் கிழிவதில்லை -2
ஆயிரம் மைல்கள் நடந்திட்டபோதும் நதிகள் அழுவதில்லை -2
1. கருவைச் சுமக்கும் தாய்க்கு என்றும் குழந்தை சுமையில்லை
கருவிழிச் சுமக்கும் இருவிழி அதற்கு இமைகள் சுமையில்லை (2)
மதுவைச் சுமக்கும் மலர்களுக்கென்றும் பனித்துளி சுமையில்லை-2
வானைச் சுமக்கும் மேகத்திற்கென்றும் மழைத்துளி சுமையில்லை-2
2. அகழும் மனிதரைத் தாங்கும் பூமிக்கு முட்கள் சுமையில்லை
இகழும் மனிதரில் இறக்கும் மனதுக்குச்
சிலுவைகள் சுமையில்லை (2)
உலகின் பாவம் சுமக்கும் தோள்களில்
நானொரு சுமையில்லை (2)
உயிரை ஈயும் உன் சிறகின் நிழலில் இதயம் சுமையில்லை - 2