விண்ணோர் மகிழ்ந்து பாடும் பாடல் உன்னைத் தாலாட்ட மண்ணோர் உவந்து பாடும் பாடல் உன்னை வரவேற்க

1. ♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 

2. ♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


விண்ணோர் மகிழ்ந்து பாடும் பாடல் உன்னைத் தாலாட்ட

மண்ணோர் உவந்து பாடும் பாடல் உன்னை வரவேற்க ஆ... (2)


1. தந்தை நெஞ்சில் மஞ்சம் கொண்ட வார்த்தை நீயன்றோ

தேவ வாழ்வின் தூய மேன்மை ஏன் துறந்தாயோ எம்

தாழ்ந்த உள்ளம் தன்னில் நீ வந்தருள்வாயோ


2. மாபெரும் மகிழ்வை வழங்கும் செய்தி வானவன் அறிவித்தான்

தாவீதின் நகரில் மாமரி மடியில் மாபரன் பிறந்துள்ளார் (2)

நின் பாதம் தொழுதிட வந்தோம் எம் தாகம் தீர்ப்பாயோ -2