♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
குழந்தை இயேசு வருவீரே
என் இதயக் குடிலில் எழுவீரே - 2 (2)
விண்ணில் வாழ்ந்த இறைமகனே
விண்ணவர் போற்றும் தூயவனே (2)
என்னில் நீவிர் வந்திடவே
இன்னிசையாலே அழைக்கின்றேன்
1. இறைவனின் தூதர் துதித்திடவே
இடையர்கள் உம்மை வணங்கிடவே
பறவைகள் எல்லாம் பாடிடவே
பணிவுடன் உம்மை அழைக்கின்றேன்
உலகக் கவலையில் யான் மூழ்கி உம்மை மறந்து அலைந்தேனே-2
உளமே எழுந்து வந்தருள்வீர் உண்மை இன்பம் அளித்தருள்வீர்