♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
என் நெஞ்ச வீணையில் எத்தனை ராகங்கள்
ஏற்றமிகு உன் படைப்பிலே
அர்ச்சனைப் பூவாய் ஈசன் உம்மில்
அர்ப்பணமாக நானும் வந்தேன் -2
1. நான் காணும் உயிர்கள் எல்லாம் நாளெல்லாம் அவரினிலே
நான் தேடும் அமைதி எல்லாம் நாதன் அவர் பெயரினிலே
எந்தன் தேவனோடுதான் என்றும் நானும் வாழத்தான்
அர்ச்சனைப் பூவாய் . . . .
2. எனைத் தெரிந்தாய் கருவினிலே
அணைத்துக் கொண்டாய் அன்பினிலே
தனை அறிய தரணி எல்லாம் தன் கரத்தில் தாங்கிக் கொண்டாய்
எந்தன் தேவனோடுதான் என்றும் நானும் வாழத்தான்
அர்ச்சனைப் பூவாய் . . . .