தெய்வமே வாரும் என்னிலே நான் தேடிடும் வாழ்வு உம்மிலே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


தெய்வமே வாரும் என்னிலே நான்

தேடிடும் வாழ்வு உம்மிலே (2)

அன்பிற்காய் ஏங்கும் ஆடு நான்

அன்பின் ஆயனைத் தேடினேன் ஆசையாய்


1. வாழ்வது நானா இயேசுவே என்னில்

வாழ்ந்திடும் அன்பின் நேசரே (2)

நீரின்றி நானில்லை என்றுமே வாழ்வில்

நீங்கிடா நின் துணை என்னிலே (2)

நீங்கிடா நின் துணை என்னிலே


2. உள்ளத்தின் ஆழம் அறிந்தவா என்னில்

உள்ளது யாவும் தெரிந்தவா (2)

உன் துணையில் நான் வாழ்ந்திடவே இனி

உன்னதமாகும் என் உள்ளமே (2)

உன்னதமாகும் என் உள்ளமே