வார்த்தையே எம் தேவனே வார்த்தை மனுவானார் நம்மில் குடிகொண்டார்


வார்த்தையே எம் தேவனே

வார்த்தை மனுவானார் - 2 நம்மில் குடிகொண்டார் - 2

வாக்கு ஆற்றல் மிக்கது நிலைவாழ்வு தருவது

வார்த்தையே எம் தேவனே வாழ்வைத்தரும் நல் ஆயனே

வார்த்தையை என் வாழ்க்கையாய் மாறச் செய்யும் தேவனே


1. உலகம் வெறுத்தாலும் உம் வார்த்தையே எம் துணை

துயரம் சூழ்ந்தாலும் உம் வார்த்தையே எம் துணை

நீயின்றி உலகில்லை உன் சொல்லின்றி வாழ்வில்லை - 2

வாழ்வைத் தாருமே உந்தன் வார்த்தையால்

எங்கள் வாழ்வில் வசந்தம் வீசுமே


2. சொந்தம் பிரிந்தாலும் உம் வார்த்தையே எம் துணை

சுகங்கள் மறைந்தாலும் உம் வார்த்தையே எம் துணை

நிறைவின்றி வேரில்லை உம் சொல்லின்றி கதியில்லை - 2

அன்பைத் தாருமே உந்தன் வார்த்தையால்

எங்கள் வாழ்வை ஒளிரச் செய்யுமே