இயேசுவின் வழியில் ஓரணியாக இயங்கிட அனைவரும் கூடிடுவோம்
கறைகளைக் கழுவி நிறைவினை அளிக்கும்
கல்வாரி பலியினில் கலந்திடுவோம்
வருவோம் வருவோம் ஆலயமே
தருவோம் தருவோம் நம் மனமே
1. மதங்களில் புதைந்து மனிதத்தை மறந்தோம்
மாறி வருகின்றோம்
உள்ளங்கள் தெளிந்து உறவினைப் புரிந்து
உன்னில்லம் வருகின்றோம்
கண் போல எம்மைக் காக்கின்ற தேவா
அன்போடு நாளும் அணைக்கின்ற நாதா
அலையென திரண்டு ஓடோடி வந்தோம்
2. கனவினில் மிதந்து கடமைகள் மறந்தோம் மாறி வருகின்றோம்
சுயநலம் கடந்து சமத்துவ உலகில் சுடர்விட வருகின்றோம்
மண் வாழும் மாந்தர் உன் போல வாழ
எம் ஆவல் ஆற்றல் எல்லாமும் சேர்த்து
உன் வாசல் வந்தோம் எம் வாழ்வைத் தந்தோம்