♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
நீயின்றி வாழ்வேது இறைவா - உன்
நினைவின்றி மகிழ்வேது தலைவா
நீயின்றி வாழ்வேது இறைவா
1. உலகத்தில் நூறாண்டு நான் வாழ்ந்தபோதும் - உன்
இல்லத்தில் ஒருநாளே போதும்
பலகோடி வார்த்தைகள் நான் கேட்ட போதும் - உன்
திருநாவின் சொல் ஒன்றே போதும்
உன்னோடு நான் வாழ்ந்து உன் வார்த்தை நான் கேட்டு
உன்னில் நான் சரணாக வேண்டும்
2. கற்பாறை மீதெந்தன் வீடாகினாலும் - உன்
பொற்பாதத் துணை நாளும் வேண்டும்
உலகோரின் உறவென்னை உயர்வாக்கினாலும் - உன்
கரம்தானே எனைத் தாங்கிக் கொள்ளும் (2)
உப்பாக ஒளியாக உண்மைக்குச் சான்றாக
எப்போதும் நான் வாழவேண்டும்