வெண்ணிலா இந்த மண்ணில் வா குளிர் பனியில் மலர்ந்தவா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


வெண்ணிலா இந்த மண்ணில் வா

குளிர் பனியில் மலர்ந்தவா (2)

மரியின் மலரே நிலவின் ஒளியே

அழகின் அமுதே இன்பமே தாலேலோ


1. விண்ணவா என் மன்னவா உந்தன் அமைதி தா

உயிரிலா உன் ஒளியிலா உண்மை உறவு தா

அன்னை மரியின் பாலகா கண்ணின் மணியே வா

மன்னவா இந்த மண்ணில் வா

எந்தன் கண்ணில் வா கருணை தா


2. உண்மையால் உன் வருகையால் உலகம் மலர வா

நன்மையால் உன் மாண்பினால் மனிதம் மகிழ வா

அன்னை மரியின் பாலகா மண்ணில் அமைதி தா

மன்னவா இந்த மண்ணில் வா

எந்தன் கண்ணில் வா கருணை தா